Spotlightசினிமா

6 வாரத்திற்கு பிறகே கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொண்ட பிரபல நடிகை!

பிரபல நடிகையும் தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட நாயகியுமான நடிகை ஏமி ஜாக்சனுக்கும், இங்கிலாந்தை சேர்ந்த தொழில் அதிபர் ஜார்ஜுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

அவர்கள் அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதாக எமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய எமி, ‘முதல் 12 வாரங்கள் கஷ்டமாக இருந்தது. ஆனால் நான் கர்ப்பமாக இருப்பதை 6 வாரங்கள் கழித்து தான் கண்டுபிடித்தேன். நான் கர்ப்பமாக இருப்பது தெரியாமல் இலங்கை, இந்தியா, நியூயார்க் என்று பயணம் செய்து கொண்டிருந்தேன்.

நான் கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொண்ட பிறகு சற்று ஓய்வெடுக்க முடிவு செய்தேன். இது திட்டமிடப்பட்ட கர்ப்பம் அல்ல. குழந்தை பிறந்த பிறகு அது என்னுடன் சேர்ந்து பயணம் செய்யும் என்பதில் உறுதியாக உள்ளேன்.

எங்களுக்கு அழகான வீடு உள்ளது. அப்பா, அம்மா ஆக நானும், ஜார்ஜும் தயாராகிவிட்டோம். என் குடும்பத்தார் மிகவும் ஆதரவாக உள்ளனர். நான் கொடுத்து வைத்தவள். தாயாகப் போவதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

குழந்தை பிறந்த பிறகும் நான் நடிப்பில் கவனம் செலுத்துவேன். கெரியர் மிகவும் முக்கியம். ஆனால் குட்டி பிரேக் எடுத்துவிட்டு தான் நடிப்பை தொடர்வேன். நான் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் இந்த கர்ப்ப காலத்தை பிரேக்காக நினைக்கிறேன்.’ என்றார் ஏமி ஜாக்சன்.

Facebook Comments

Related Articles

Back to top button