
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி பாமக சார்பில் சென்னையில் இன்று போராட்டம் நடைபெற்றும் என கடந்த வாரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்திருந்தது.
இதையடுத்து இன்று காலையிலேயே போராட்டத்திற்காக பெரும்திரளாக போராட்டக்காரர்கள் வரத் தொடங்கியதால் சென்னை பெருங்களத்தூரில் 2 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
அதுமட்டுமல்லாமல், போலீஸ் தடுப்புகளை மீறி சென்னை பெருங்களத்தூரில் ரயிலை மறித்து கல்வீச்சு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், தாம்பரம் மிஷன் மருத்துவமனை அருகே 1000க்கும் மேற்பட்ட பாமகவினர் சாலை மறியல் செய்து வருகின்றனர்.
அண்ணாநகர்,மதுரவயலில் 500க்கும் மேற்பட்ட பாமகவினர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Visuals of PMK cadres pelting stones at a train and staging rail roko after police blocked several of them from entering Chennai to take part in the protest seeking 20% reservation for the Vanniyar community. pic.twitter.com/XVukzUeLI9
— Shilpa Nair (@NairShilpa1308) December 1, 2020