
“நெஞ்சுக்கு நீதி” என்ற படத்தில் நடித்து வருகிறார் நடிகரும் எம் எல் ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின்.
இப்படத்தினைத் தொடர்ந்து பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறாராம் உதயநிதி ஸ்டாலின்.
இதற்காக, ஏற்கனவே கமிட் ஆன படங்களை ஓரங்கட்டியிருக்கிறாராம் இயக்குனர்.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஜோடியகவும் பஹத் பாசில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடிக்கவிருக்கிறார்களாம். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறாராம்.
அதுமட்டுமல்லாமல், ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தினை முடித்ததும் கோலிவுட்டிற்கு முழுக்கு போட்டுவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபடவிருக்கிறாராம் உதயநிதி ஸ்டாலின்.
Facebook Comments





