
தனது பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள கல்லூரியில் நாப்கின் இயந்திரங்களை வழங்கிய பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய வரலட்சுமி சரத்குமார்,
”என்னைப் பொருத்தவரை பெண்கள் மட்டுமல்ல, இளைஞர்கள் அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும். அரசியல் என்பது ஏதோ கெட்ட வார்த்தை என்பது போல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அது கெட்ட வார்த்தை இல்லை. நாம தான் அதை மாற்ற வேண்டும். ஒரு விரல் புரட்சி நம்மிடம் தான் உள்ளது. அதை நாம் தான் சரியாக பயன்படுத்த வேண்டும்.” என்று கூறினார்.
மேலும், அரசியலுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை எனவும் நன்கு கற்று விட்டு சரியான நேரத்தில் அரசியலுக்கு வர உள்ளதாகவும் நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.
Facebook Comments





