Spotlightசினிமா

இந்தியாவில் நம்பர் ஒன்… ஓடிடி’யிலும் சாதனை படைக்கும் “வீர தீர சூரன்”!

யக்குனர் சு அருண்குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம், துஷாரா விஜயன், எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த மாதம் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் ”வீர தீர சூரன் – பாகம் 2”.

சீயான் விக்ரமிற்கு நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஒரு மிகப்பெரும் வசூல் வேட்டை நடத்தி கொடுத்த படம் இந்த ”வீர தீர சூரன்” ஆகும்.

திரையரங்குகளை அவரது ரசிகர்கள் திருவிழாவாக மாற்றி இப்படத்தை பெரிதளவில் கொண்டாடினர்.

தொடர்ந்து படம் வெளியாகி ஒரு மாத காலம் ஆன நிலையில், சில தினங்களுக்கு முன் இப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது.

திரையரங்கிற்கு சென்று பார்க்காத பலர், இப்படத்தை ஓடிடி தளத்தில் கண்டுகளித்து இயக்குனரையும் சீயான் விக்ரமையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

ஒரு சில காட்சிகளை குறிப்பிட்டு பலரும் சமூக வலைதள பக்கத்தில் படத்தை பாராட்டி எழுதி வருகின்றனர்.

இந்தியாவில் ஓடிடி தளத்தில் தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது இந்த ”வீர தீர சூரன் – பாகம் 2”

Facebook Comments

Related Articles

Back to top button