
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக காமெடி, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி.
இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தமிழ் சினிமாவில் இவரது பங்களிப்பு என்பது அலப்பறியது.
சில மாதங்களுக்கு முன் இவருக்கு புற்று நோய் இருப்பது அறியப்பட்டு, அதற்கான சிகிச்சையில் இருந்து வருகிறார். இருந்தாலும், தான் நடித்திருந்த “கமாண்டோவின் லவ் ஸ்டோரி” படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருவதை கேள்விப்பட்டு, இயக்குனர் வீர அன்பரசை தொடர்பு கொண்டு, நான் நடித்த காட்சிகளுக்கு நானே டப்பிங் பேசி தருகிறேன் எனக்கூறி, உடல்நிலையை பற்றி கவலை கொள்ளாமல் டப்பிங் ஸ்டூடியோ வந்து அவருக்கான காட்சிகளுக்கு டப்பிங் பேசியுள்ளார்.
அவரது இந்த அர்ப்பணிப்பைக் கண்டு படக்குழுவினரே கண்கலங்கினர். படக்குழுவினர் அவரின் உடல்நிலை நலமாக பிரார்த்தனை செய்தனர்.





