Spotlightசினிமா

பிரம்மாண்டமான கிராம செட்; இறுதிகட்ட படப்பிடிப்பில் வெற்றிமாறனின் “விடுதலை”!!

வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகி வருகிறது “விடுதலை”. இப்படத்தின் கதை நாயகனாக சூரி நடிக்கிறார். சூரிக்கு ஜோடியாக ஜி வி பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீ நடிக்கிறார்.

மேலும், விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடைந்துள்ள நிலையில், இம்மாத இறுதியில் இறுதிகட்ட படப்பிடிப்பு துவங்கப்படவிருக்கிறது.

இதற்காக திண்டுக்கல் அருகே மிகப்பெரிய கிராமம் செட் போடப்பட்டுள்ளது. இங்கு ஒரே கட்டமாக இறுதிகட்ட படப்பிடிப்பை நடத்தி முடிக்க வெற்றிமாறன் திட்டமிட்டிருக்கிறார்.

அனைத்து நடிகர்களும் இந்த இறுதிகட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருப்பதால் முக்கியமான காட்சிகள் படமாக்கி முடிக்கப்படவிருக்கின்றன.

Facebook Comments

Related Articles

Back to top button