
நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்க கடந்த புதன் அன்று வெளிவந்த திரைப்படம் தான் “பீஸ்ட்”. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இதுவரை சுமார் 200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது பீஸ்ட்.
பீஸ்ட் படத்தின் வசூல் மற்றும் திரையரங்குகளின் எண்ணிக்கைக் குறித்து திருப்பூர் சுப்ரமணியம் அவர்கள் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, “ தமிழகத்தில் மொத்தம் உள்ள 1168 ஸ்கிரீன்களில் சுமார் 1100 ஸ்கிரீன்கள் பீஸ்ட் படத்திற்காக கொடுக்கப்பட்டது முதல் நாள் மட்டும்.
இரண்டாம் நாள் கே ஜி எஃப் 2 வந்ததால் 800 ஸ்கிரீன்களில் பீஸ்ட் திரையிடப்பட்டது.
இதுவரை வந்த தமிழ் சினிமாவில் முதல் நாளில் இப்படி ஒரு கலெக்ஷன் வந்ததில்லை. முதல் நாள் வசூல் யாரும் எதிர்பார்க்காத வசூலை ஈட்டித்தந்தது “பீஸ்ட்”. என்று கூறியுள்ளார்.
இருந்தும் நெட்டிசன்கள் பலர் பீஸ்ட் தோல்வி என்று கத்திக் கொண்டு வருகின்றனர். வசூல் ரீதியாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பீஸ்ட் வெற்றி பெற்றிருக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.