Spotlightசினிமா

என்கவுண்டர் போலீஸாக மிரட்டும் வெற்றி – ‘பரீட்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

‘8 தோட்டாக்கள்’ புகழ் நடிகர் வெற்றி கதாநாயகனாக நடிக்கும் ‘பரீட்’ (Buried) திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன் மற்றும் நடிகர் ஆரி அர்ஜுனா ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

ட்ரீம் ஹவுஸ் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை, ‘வெப்’ படத்தை இயக்கிய ஹாரூண் எழுதி இயக்கியுள்ளார். இதில் வெற்றி என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அக்சிதா நடித்துள்ளார். சாந்தினி தமிழரசன், பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சரவணன் சுப்பையா, ஜென்சன் திவாகர், கோடாங்கி வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டான போலீஸ் அதிகாரி தனது பணியில் எதிர்கொள்ளும் சவால்களும், அதனால் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளும் படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளன. இன்வெஸ்டிகேஷன் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜான் ராபின்ஸ் இசையமைத்துள்ளார். கே.வி. கிரண் ஒளிப்பதிவு செய்ய, டான்பாஸ்கோ படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

மேலும், போலீஸை மையப்படுத்திய முக்கியமான பாடலை இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பாடியுள்ளார். சென்னை, கோவை, ஏற்காடு, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ‘பரீட்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button