
தமிழகத்தில் அடுத்தடுத்து ஐந்து புயல்கள் உருவாக இருப்பதாகவும், டெளட்கோ புயல் டிசம்பர் 8-ஆம் தேதியும், டிசம்பர் 17-ஆம் தேதி யாஸ் என்னும் புயலும், 24-ஆம் தேதி குலாப் என்னும் புயலும், அடுத்த ஆண்டு ஜனவரி 01-ஆம் தேதி ஷாஹீன் என்னும் புயலும், அடுத்த ஆண்டு, 2021-இல் ஜனவரி 08-ஆம் தேதி ஜவாத் என்னும் புயலும் உருவாவதாக ஒரு தகவல் வாட்சப் மற்றும் பிற சமூக வலைதளங்களிலும் பரப்பப்பட்டு வருகிறது. இது முற்றிலும் தவறானது.
இத்தகைய தவறான வதந்திகளை ஃபரப்புவதை முற்றிலும் கைவிடுமாறு வானிலை குறித்த சிறப்பார்வம் கொண்ட தமிழ்நாடு வெதர்மேன் ப்ரதீப் ஜானும் ட்விட்டர் வழியே கோரிக்கை விடுத்துள்ளார்.
Facebook Comments





