
பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் ‘Love & War’. ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கௌஷல் முதன்முறையாக இணைந்து நடிக்கும் இப்படத்தின் புதிய போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது.
ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்டின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களைத் தொடர்ந்து, தற்போது விக்கி கௌஷலின் இரண்டு மாறுபட்ட தோற்றங்கள் வெளியாகியுள்ளன. ஒரு போஸ்டரில் சிகரெட் மற்றும் லைட்டருடன் தீவிரமான பார்வையில் அவர் தோன்றுகிறார். மற்றொரு போஸ்டரில் நீச்சல் குளத்தில் மலர்க்கொத்துடன் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.
இந்த இரண்டு போஸ்டர்களும் விக்கி கௌஷலின் கதாபாத்திரம் குறித்த ஆர்வத்தை அதிகரித்துள்ளன. மேலும், சஞ்சய் லீலா பன்சாலியுடன் விக்கி கௌஷல் இணையும் முதல் திரைப்படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
‘Love & War’ திரைப்படத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கௌஷல் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படம் 2027 ஜனவரி 21 அன்று உலகம் முழுவதும் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.





