இயக்கம்: குரு கார்த்திகேயன்
நடிகர்கள்: சுகி விஜய், யான்னி ஜாக்சன், ஷர்மி, கிஷோர் ராம், கார்த்திக் சஞ்சய்
ஒளிப்பதிவு: மோகன் சந்திரா
இசை: ஹரி தாஸ்
தயாரிப்பு: ஹரி கிருஷ்ணன் வாசுதேவன்
இரத்தம் மற்றும் இருட்டு என்ற இரண்டு மையப்புள்ளிகளை வைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் குரு கார்த்திகேயன்.
போலீஸ் அதிகாரி ஒரு பெண்ணிடம் விசாரணை நடத்த, அங்கு ஆரம்பிக்கிறது கதை. ஏரியா எம் எல் ஏ’வின் மகளாக வரும் ஷர்மிளா, தனது காதலனை தனியார் ரெசார்ட் ஒன்றிற்கு வரவழைக்கிறார். இருவரும் தனிமையில் இருக்கின்றனர்.
அப்போது அங்கே வரும் வில்லன் யானி ஜாக்சன், இருவரையும் கடத்தி சவப்பெட்டி போன்ற மரப்பெட்டியில் இருவரையும் தனித்தனியே அடைத்து வைக்கிறார்.
கடைசியில், காதலர்கள் இருவரும் அங்கிருந்து தப்பித்தார்களா இல்லையா.? யார் இந்த யானி ஜாக்சன்.? இவருக்கும் காதலர்களுக்கும் என்ன சம்மந்தம் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடை இரண்டாம் பாதியில் வைத்திருக்கிறார் இயக்குனர்.
நாயகனாக நடித்திருக்கும் சுகி விஜய் மற்றும் நாயகியாக நடித்திருக்கும் ஷர்மிளா இருவருமே கதைக்கேற்ற கதாபாத்திரங்களாக வந்து மிரட்டியிருக்கிறார்கள். பதட்டம், ஏக்கம் என பல இடங்களில் தங்களது கண்களாலே நடிப்பின் திறமையை வெளிக்காட்டியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் வந்த பல சைக்கோ த்ரில்லர் படங்களில் இப்படம் சற்று மாறுபட்டு நின்றது படத்தினை பார்க்கும் ஆவலை அதிகமாகவே தூண்டியது. மேலும், வில்லனாக நடித்த யானி ஜாக்சன் தான் படத்தில் மிரள வைக்கும் கதாபாத்திரம்.
எதுவும் பேசாமலேயே தனது கேரக்டரை மிரட்டலாக நடித்து கொடுத்திருக்கிறார். மனிதனைத் தின்று மனிதன் சாப்பிடும் ஒரு வரி கதையை இரண்டாம் உலகப் போரில் இருந்து தொடங்கியிருக்கிறார் இயக்குனர் குரு கார்த்திகேயன். அதன்படி வில்லனின் தாத்தா வழி ஆராய்ச்சியை சொல்ல இந்த கொலைகளை அவர் செய்வதாக சொல்லப்பட்டுள்ளது..
தமிழ் படமாக இருந்தாலும் பல காட்சிகளில் ஆங்கிலத்திலேயே கதை வசனம் நகர்த்தப்பட்டுள்ளது.. முக்கியமாக வில்லன்கள் படத்தில் எந்த வார்த்தைகளும் மௌனமாக
சில முகம் சுழிக்க வைக்கும் காட்சிகளை கொஞ்சம் நீக்கியிருந்திருக்கலாம்… இருட்டு மற்றும் இரத்தம் இரண்டுமே படம் முழுக்க இருப்பதால், படம் முடிந்து வெளியே வந்தாலும் நம் மீது ரத்தம் தெறித்திருப்பது போன்ற ஒரு உணர்வை கொடுத்து விட்டார் இயக்குனர்.
பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலமாக வந்து நின்றது.
மொத்தத்தில்,
முரட்டு ஹாரர் பிரியர்களுக்கான தரமான விருந்து தான் இந்த “பிளட் அண்ட் பிளாக்”