![](https://tamilveedhi.com/wp-content/uploads/2018/04/Livingston.jpg)
விஜய் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘தளபதி 62’. அந்த வகையில் தற்போது ஸ்ட்ரைக் எல்லாம் முடிந்து இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தளபதி 62-வில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இதில், கீர்த்தியின் அப்பாவாக பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் நடிக்கவுள்ளாராம்.
இதை இவரே சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். லிவிங்ஸ்டன் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு முன்னணி நடிகர் படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Facebook Comments