கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய் மொழியில் தளபதி விஜய் அவர்களின் பிறந்த நாள் முன்னிட்டு வித்தியாசமான முறையில் நற்பணி செய்ய வேண்டும் என்று நோக்கத்தில் கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவர், விஜயின் முன்னாள் மேலாளர், புலி பட தயாரிப்பாளர் P. T. செல்வகுமார் தளபதி விஜயின் 50 வது பிறந்தநாள் முன்னிட்டு 50 ஆடுகள், 200 அரிசி மூட்டைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி பிறந்த நாளை கொண்டாடினார். ஆரல்வாய்மொழி நடைபெற்ற இந்நிகழ்வில் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியபோது நமது கலாச்சாரத்தை வேறொரு திசையில் திசை திருப்புகிறார்கள்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் வடித்தவருக்கும் குடித்தவருக்கும் ஆதரவளித்து உற்சாகப்படுத்துவது போல் செயல்பாடுகளை பார்க்கும் பொழுது மன வேதனையாக உள்ளது . குடி குடியை கெடுக்கும் என்று தெரிந்தும் கள்ளச்சாராயம் குடித்தவர்களை ஊக்க படுத்துவோம் என்றால். விவசாயிகள் புயல், மழையால் எத்தனை விவசாயிகள் மனம் உடைந்து தற்கொலை செய்து இருக்கிறார்கள்,சிறு தொழில் குறு தொழில் செய்கிறவர்கள் பெரும் கடன் சுமையால் தற்கொலை செய்கிறார்கள், தினசரி சாலை விபத்துக்கள் நடைபெறுகிறது இதில் அப்பாவிகள் திறமை வாய்ந்தவர்கள் விபத்தில் சிக்கி இறக்கின்றார்கள். இவர்கள் மேல் யாருக்கும் அக்கறை வருவதில்லை ஏனென்றால் இவர்கள் மேல் கவனம் செலுத்தினால் பப்ளிசிட்டி ஆகாது. பப்ளிசிட்டிக்காக எதிர்க்கட்சிகளும், ஆளும் கட்சிகளும் அவர்கள் ஆதாயத்திற்காக இதை பெரிது படுத்த வேண்டாம்.
நாட்டின் எத்தனையோ குழந்தைகள் அம்மா அப்பா இல்லாமல் நடுத்தெருவில் நிற்கின்ற அவர்களுக்கு உதவி செய்யலாமே. தவறு செய்பவர்களுக்கு உதவி செய்தால் மறுபடியும் மறுபடியும் தவறு செய்வார்கள். குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்டால் நல்லவர்களுக்கு என்ன நியாயம் கிடைக்கும். இந்த குற்றவாளிகளுக்கு 10 லட்சம், 15 லட்சம் உதவி செய்தால் அப்பொழுது நல்லவர்கள் எப்படி வாழ முடியும். இந்த தவறான பிற்போக்கு சிந்தனையை எல்லோரும் மாற்ற வேண்டும்.கிராமங்கள் தோறும் மாதத்திற்கு இரண்டு முறை நல்லொழுக்க பயிற்சி கொடுக்க வேண்டும் என்று P. T செல்வகுமார் பேசினார்.
இந்நிகழ்வில் கலப்பை மக்கள் இயக்கம் குமரி மாவட்ட தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன், அமைப்பாளர் புஷ்பராஜ், காமராஜர் நற்பணி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.