
நட்டி, லால் நடிப்பில் நாளை வெளிவர இருக்கும் திரைப்படம் தான் ‘காட் பாதர்’.
மனைவி அனன்யா தனது 5 வயது மகன் அஷ்வத் என ஒரு அப்பார்ட்மெண்டில் சாதாரண நடுத்தர குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வருபவர் நட்டி.
ஏரியாவில் மிகப்பெரும் கேங்ஸ்டராக பெரும் ரவுடியாக இருந்து வருபவர் லால். சுமார் 15 வருடங்கள் கழித்து இவருக்கு பிறந்த குழந்தையிடம் அலாதி அன்பு உண்டு இவருக்கு.
இச்சமயத்தில், லால் மகனுக்கு இதயகோளாறு ஏற்பட, சீர்செய்ய அதே ரத்த குரூப்பில் இருக்கும் ஒரு சிறுவனின் இதயத்தை மாற்றினால் மகனை காப்பாற்றிவிடலாம் என டாக்டர்கள் லாலிடம் கூற,
அதே ரத்த குரூப்பில் இருக்கும் நட்டியின் மகனை தூக்க நினைக்கிறார்கள்.
இறுதியாக, அந்த ரெளடி கும்பலிடம் இருந்து நட்டி தனது மகனை காப்பாற்றினாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
நட்டி, சில படங்களுக்குப் பிறகு நட்டிக்கு மிகவும் பெயர் வாங்கிக் கொடுக்கும் படமாக காட் ஃபாதர் நிச்சயம் இருக்கும். தனது மகனை காப்பாற்ற ஒரு தந்தை படும் இன்னல்களை கண்முன்னே நிறுத்தி, அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.
லால், தனது டான் கேரக்டரை கச்சிதமாக செய்திருக்கிறார். தனது நடை, பேசு மொழி, உடல் பாவணை என அனைத்தையும் சரியாக நிறுத்தியிருக்கிறார்.
சாதாரண கதை தான் என்றாலும், அதை எடுத்த விதத்தில் உச்சம் தொடுகிறார் இயக்குனர் ஜெகன் ராஜசேகர். படம் ஆரம்பித்த சிறிது நேரத்திலே கதைக்குள் சென்றது படத்திற்கு மிகப்பெரும் பலம்.
அடுத்து என்ன நடக்கும் , அடுத்து என்ன நடக்கும் என்ற மனப்போக்குடன் சீட்டின் நுனியில் வந்து அமர வைத்து விடுகிறார் இயக்குனர்.
ரெளடிகளிடம் அஷ்வத் மாட்டி விடக்கூடாது, என்பதில் நட்டியோடு சேர்த்து நம்மையும் படபடக்க வைத்துள்ளார் இயக்குனர்.
இந்த படத்தை ஏன் பார்க்க வேண்டும் என்ற கேள்விக்கு ஒளிப்பதிவாளரும், பின்னனி இசையமைப்பாளரும் பதில் வைத்துள்ளார்கள்.
ஒவ்வொரு சீனையும் அவ்வளவு நுணுக்கத்தோடு எடுத்து கண் இமைகளை விரிய வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சண்முக சுந்தரம்.
அதேபோல் பின்னனி இசையும். நவீன் ரவீந்தரின் பின்னனி இசை நிச்சயம் மிரட்டல் தான். ஒளிப்பதிவும் பின்னனி இசையும் இல்லை என்றால் காட்ஃபாதரை நினைத்து கூட பார்க்க முடியாது போலும்,
ஒவ்வொரு ஷாட்டையும் (காட்சியையும்) செதுக்கி எடுத்தது போல், அழகுபடுத்தி எடுத்திருக்கிறார்கள் படக்குழுவினர்.
என்னதான் காட்சியோ இசையோ நம்மை ஒன்றி போட வைத்தாலும், கதைக்குள் ஒட்ட முடியாதது போல ஓரு ஃபீலிங் இருக்கதான் செய்கிறது.
நல்ல ஒரு மேக்கிங்கிற்காக படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.
காட் ஃபாதர் – கிங் ஆஃப் மேக்கிங்…





