Spotlightசினிமா

பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி… போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்!

ருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் பொன்ராம். இதில் சீமராஜா மட்டும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை.

அடுத்ததாக எம்ஜிஆர் மகன் என்ற படத்தினையும் இயக்கியிருக்கிறார். இன்னும் வெளிவராத நிலையில், அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்க ஆரம்பித்துவிட்டார் பொன்ராம்.

VJ46 என்று தற்காலிகமாக டைட்டில் வைத்து படப்பிடிப்பினை தொடங்கியிருக்கிறது படக்குழு.

இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

மேலும், இப்படத்தில் மிஸ் இந்தியா பட்டம் பெற்ற ஒருவர் நாயகியாக நடிக்க இருப்பதாக ஒரு எக்ஸ்க்ளூசீவ் செய்தி கிடைக்கப்பெற்றிருக்கிறது.

மேலும் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதி வரை முதல்கட்ட படப்பிடிப்பை அங்கு நடத்த படக்குழு திட்டமிட்டிருக்கிறது.

படத்திற்கு டி இமான இசையமைக்கவிருக்கிறார். சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறார்.

Facebook Comments

Related Articles

Back to top button