ஜோக்கர் படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் நாயகன் குரு சோமசுந்தரம். அவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் இந்த ஓடு ராஜா ஓடு..
குருசோமசுந்தரத்தின் மனைவி லட்சுமி ப்ரியா. கணவர் ஒரு எழுத்தாளர். சினிமா வாய்புப்பாக அலைகிறார். வீட்டில் இருக்கும் அவருக்கு ஏதாவது ஒரு வேலை கொடுத்தால் அவர் பொறுப்புடன் எப்படி செய்கிறார் என்பதை பரிசோதிப்பதற்காக அவரை ஒரு செட்டப் பாக்ஸ் வாங்கி வர சொல்லி அனுப்புகிறார் மனைவி லட்சுமி ப்ரியா.
மனைவி கொடுத்தனுப்பும் பணத்தை வைத்து செட்டப் பாக்ஸ் வாங்க செல்லும் குரு சோமசுந்தரம், அங்கு அவரது நண்பன் மூலம் ஒரு சிக்கல் வர அவரிடம் இருந்த பணத்தை ரவுடி ஒருவன் அபகரிக்க, அங்கிருந்து அடுத்தடுத்த பிரச்சனைகளில் குரு சோமசுந்தரம் சிக்கிக் கொள்கிறார்.
இதற்கு நடுவில் பழைய தாதா நாசர், இவரது தம்பி வீரபுத்திரன் என இருவரும் கதைக்குள் எட்டிப் பார்க்கின்றனர்.
மேலும், அடுத்த ஒரு கதையாக குப்பத்தில் வாழும் சிறுமி மலரும் (பேபி ஹரினி), சிறுவன் சத்யாவும் (மாஸ்டர் ராகுல்), காணாமல் போன பணத்தை அடித்து ஜாலியாக ஊர் சுற்றுகிறார்கள்.
இந்த கதைகள் அனைத்தையும் ஒரு சேர வைத்து கதையின் க்ளைமேக்ஸ்-ஐ சொல்லி முடித்திருக்கிறார் இயக்குனர்
குரு சோமசுந்தரம் வழக்கம்போல யதார்த்த நடிப்பில் நம்மை அசர வைத்திருக்கிறார்.
மனைவியாக வரும் லட்சுமி பிரியா, நாசர், ஆஷிகா, பேபி ஹிரினி, மாஸ்டர் ராகுல் என அனைவரும் கச்சிதமான நடிப்பை தந்துள்ளனர்.
படத்தில் பெண்களையும் ஆண்களையும் செக்ஸ்க்காக அலைபவர்களாக காட்டியுள்ளனர். மேலும், குழந்தைகளின் காதல், நண்பர்களுக்குள் தெரியாத ஒருத்திக்கு இருவர் என ஆங்காங்கே கலாச்சார மீறலும், முகச்சுளிவும் அடைய வைத்திருக்கிறது.
திரைக்கதை எழுதி படத்தொகுப்பை கவனித்திருக்கிறார் நிஷாந்த். தோஷ் நந்தா இசையில் பாடல்கள் ஜஸ்ட் ஓகே. பின்னனி இசை ஆங்காங்கே எடுபட்டிருக்கிறது.
இப்படத்தை இரட்டை இயக்குனர்கள் நிஷாந்தும், ஜத்தினும் இயக்கியுள்ளனர்.
படத்தில் இன்னும் காமெடியை சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
ஓடு ராஜா ஓடு – இயக்குனர்கள் நிதானமாக ஓடியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்….