
விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் ரசிகர்களின் மனதை வென்ற ‘96’ திரைப்படம் அக்டோபர் 9, 2026 அன்று மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இயக்குநர் சி. பிரேம்குமார் இயக்கத்தில் 2018-ஆம் ஆண்டு வெளியான இப்படம், பள்ளிப் பருவக் காதல், பிரிவு மற்றும் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கும் காதலர்களின் உணர்வுகளை அழகாகப் பதிவு செய்திருந்தது.
விஜய் சேதுபதி நடித்த ராம், திரிஷா நடித்த ஜானு கதாபாத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தன. கோவிந்த் வசந்தாவின் இசையில் உருவான ‘காதலே காதலே’, ‘தி லைஃப் ஆஃப் ராம்’ உள்ளிட்ட பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன.
Madras Enterprises சார்பில் எஸ். நந்தகோபால் தயாரித்த இப்படம், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பெரிய திரைக்கு வருவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராம் – ஜானுவின் மறக்க முடியாத காதல் நினைவுகளை மீண்டும் திரையரங்குகளில் கொண்டாட அக்டோபர் 9 முதல் ‘96’ மறுவெளியீடு செய்யப்படுகிறது.
Facebook Comments





