
பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்றது. இதில் 15 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் அபிராமி. 16வது போட்டியாளராக மாடல் அழகி மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.
மீரா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததில் இருந்து அபிராமிக்கும், மீராவிற்கும் இடையே பெரிய பிரச்சினை வெடித்தது. இது அனைத்தும் நாம் அறிந்ததே.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவு பெற்ற பிறகும் மீரா, அபிராமி சண்டை தொடர்கிறது. இன்ஸ்டாகிராமில் மீரா ஒரு புகைப்படம் பதிவிட அதை அபிராமி ரசிகர்கள் கிண்டல் செய்தனர். உடனே மீரா, அபிராமிக்கு வாழ்க்கை குடுத்ததே நான் தான் என்று கூறினார்.
https://twitter.com/meera_mitun/status/1182242709530169344?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1182242709530169344&ref_url=https%3A%2F%2Fcinemakkaran.net%2Fnews%2Fabhirami-meera-mithun%2F



