
சென்னையில் சில தினங்களுக்கு முன் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பேனர் சரிந்து விழுந்து உயிரிழந்தார். இந்த இழப்பு தமிழ்நாட்டில் பெரும் கொந்தழிப்பை ஏற்படுத்தியது.
அரசியல் கட்சிகளின் பேனருக்கு எதிராக மக்களின் கோபம் கொந்தளித்தது. பல நடிகர்கள் தங்கள் படத்திற்கு இனி பேனர் வைக்கக் கூடாது என்ற கட்டளையை பிறப்பித்தனர். ரசிகர்களும் அதற்கு ஈடாக பல நல்ல திட்டங்களை மக்களுக்கு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், விஜய் ரசிகர்கள் விதைப் பந்துகள் தூவப் போவதாக கூறியுள்ளனர். கோவை காந்திபுரத்தில் பிகில் படத்தின் ட்ரெய்லர் திரையிடப்பட்டது. அதில் கலந்து கொண்ட விஜய் ரசிகர்கள் சார்பில் ஆயிரம் விதைப்பந்துகளும் 100 கால் பந்துகளும் குழந்தைகளிடம் வழங்கப்பட்டது.
பிகில் படம் வெளியாகும் போது 1 லட்சம் விதைப்பந்துகள் தயார் செய்து வனப்பகுதிகள் உட்பட பல இடங்களிலும் வீசப் போவதாக ரசிகர் தரப்பில் கூறப்பட்டது. பேனர் வைப்பதற்குப் பதிலாக விதைப் பந்துகள் திட்டத்தை செயல்படுத்தப் போவதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.




