
இயக்குனர் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத், அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகி வருகிறது ‘தலைவி’.
மறைந்த முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி இப்படத்தை இயக்கி வருகிறார் விஜய்.
இதன் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜி வி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
இப்படத்திற்காக ஏற்கனவே, எம் ஜி ஆர் போல் தோற்றம் வைத்து வெளியிடப்பட்ட அரவிந்த்சாமியின் புகைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ஜெயலலிதாவின் தோற்றம் வைத்து கங்கனா ரனாவத்தின் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதுவும், ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று வெளியிடப்பட்டுள்ளதால், அவரது ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர். சமூக வலைதளங்களில் இப்புகைப்படம் அனைவராலும் பகிரப்பட்டு பாராட்டையும் பெற்று வருகிறது.
Facebook Comments




