சினிமா

விக்ரம் பிரபுவின் ‘அசுரகுரு’ ஃபர்ஸ்ட் லுக்!!!

 இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!

‘JSB ஃபிலிம் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் J.S.B.சதிஷ் தயாரிக்கும் படம் “அசுரகுரு”.

திரைப்பட கல்லூரியில் தங்க பதக்கம் பெற்று  இயக்குநர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ராஜ்தீப் இயக்கி  வெளிவரயிருக்கும்  படம் ‘அசுரகுரு’, இயக்குனர் ராஜதீப் அவர்களுக்கு  தமிழக அரசு சிறந்த குறும்பட இயக்குனர்காண விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடிக்கிறார். மேலும், முக்கிய வேடங்களில் மனோபாலா, யோகி பாபு, ஜெகன், ராம்தாஸ், நாகிநீடு, சுப்புராஜ்,  குமரவேல்  ஆகியோர் நடிக்கின்றனர்.  கணேஷ் ராகவேந்திரா இசையமைக்கும் இப்படத்திற்கு ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. தற்போது, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. முதல் நாள் டப்பிங்கில் விக்ரம் பிரபு அவர்கள் பேசிய வசனம் “மக்களை நான் காப்பாற்றுவேன்”. இந்த வசனத்திற்கேற்பர் போல் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அமைந்துள்ளது.
Facebook Comments

Related Articles

Back to top button