Spotlightசினிமா

’லாக்கப்’ அனுபவத்தை கண்ணீருடன் பகிர்ந்து கொண்ட ஜெய் ஆனந்த்!

வைபவ், வெங்கட் பிரபு, வாணி போஜன், பூர்ணா, மைம் கோபி, விஜய் முத்து மற்றும் ஜெய் ஆனந்த் நடிக்க உருவாகி வருகிறது ‘லாக்கப்’.

இப்படத்தை நடிகர் நிதின் சத்யா தயாரித்து வருகிறார். படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து ரிலீஸுக்காக காத்திருக்கிறது.

இப்படத்தினை மோகன் ராஜாவின் இணை இயக்குனர் எஸ் ஜி சார்லஸ் இயக்கியிருக்கிறார்.

’லாக்கப்’ படத்தில் தான் நடித்த அனுபவத்தையும், நட்பின் ஆழத்தையும் மிகவும் உணர்ச்சி பொங்க வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகர் ஜெய் ஆனந்த்.

அவர் கூறியிருப்பதாவது, ‘ நான் அதிகம் எதிர்பார்க்கும் என்னுடைய அடுத்த படம் ‘’லாக்கப்’

போலீஸ் த்ரில்லர் ஸ்டோரி. திரு. வைபவ், திரு. வெங்கட் பிரபு இருவரும் போலீஸாக நடித்திருக்கிறார்கள்.

அடிதடி ஆக்ஷன் காட்சிகளில் வில்லத்தனமான ரோலில் நடிக்க வேண்டுமென்ற என்னுடைய பல வருட ஆசை இந்தப் படத்தின் மூலம் நிறைவறியிருக்கிறது. படத்தில் சில காட்சிகள்தான் என்றாலும் நான் ரொம்பவே ஆர்வத்தோடு ரசித்து நடித்த படம்.

எல்லாருமே முதல் படம் பண்ணும் போது நாம் கண்டிப்பா சேர்ந்து படம் பண்ணுவோம்.. என் படத்தில் நீங்களும் இருப்பீங்கனு சொல்வார்கள். ஆனால் எல்லோரும் அதை பண்ண மாட்டார்கள். அவர்களை குறை சொல்லவும் முடியாது. அது அவர்களது சூழலாகவும் இருக்கலாம். ஆனால் சொன்ன மாதிரியே நான் கூட கேட்காமல் அவரே கூப்பிட்டு இந்த வாய்ப்பளித்தார் சார்லஸ் ப்ரோ.

வேலைக்காரன் ரிலீஸான நேரத்தில் முதலில் இந்த படத்தை புதுமுகங்களை வைத்து அவர் இயக்குவதாக இருந்தது. அப்போது உங்களுக்கு நல்லாருக்கும்னு சொல்லி ஒரு நெகட்டிவ் ரோல் சொன்னார். எனக்கும் அது பிடித்தது. அந்த படம் சில நாட்களில் பண்ண முடியாமல் போகவே “ட்ராப் ஆயிடுச்சு ப்ரதர். அடுத்து எப்பன்னு தெரியல” என்றார். “தள்ளிப் போற எல்லாமே நல்லதுக்குத்தான் கவலப் படாதீங்க ப்ரோ” ன்னு சொன்னேன். பிறகு ஒருமுறை நான் கால் பண்ணும்போது நானே திரும்ப கூப்பிட்றேன் ப்ரதர்னு சொல்லிட்டு கட் பண்ணினார். ஆம்.. சினிமா அப்படித்தான்.

ஆறு மாதங்கள் இருக்கும் அவரிடம் நான் பேசி. சொன்னது போலவே அவரே ஒருநாள் போன் பண்ணினார். வைபவ் வைத்து படம் இயக்கப் போவதாக சொன்னார். மகிழ்ச்சி. “வாழ்த்துக்கள் ப்ரதர்”னு சொன்னேன்.

” உங்களுக்கு சொன்ன அந்த ரோல் நீங்கதான் பண்றீங்க” என்று சொன்னார். அப்போது நான் ஓநாய் கூட்டம் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் விஷயத்தைச் சொன்னதும் “அப்படினா வேண்டாம் ப்ரோ..விட்ருங்க. ஹீரோவாக பண்ணும்போது இந்த நெகட்டிவ் ரோல் வேண்டாம்”னு சொன்னார்.

நானும் யோசித்துவிட்டு” சரி ப்ரோ”என்று சொல்லி விட்டேன். பிறகு யோசித்து பார்த்த போது அவர் சொன்ன மாதிரியே 6 மாதங்கள் கழித்தும் கூப்பிடுகிறார். இத்தனைக்கும் இடையில் நான் ஒருமுறை கூட அவரிடம் பேசவில்லை. அவர் அழைக்கும் போது நான் போகாமல் இருந்தால் சரியாக இருக்காது என்று தோன்றியதால் அடுத்த 5 நிமிடத்தில் அவருக்கு போன் பண்ணி “நானே பண்றேன் ப்ரோ. .

அது ஒருவேள சின்னதா இருந்தாலும் பரவால்ல” என்று சொன்னேன். “ரொம்ப சின்னதாலாம் இருக்காது பிரதர். உங்களுக்கு நல்லாருக்கும்” என்று சொல்லி ஓகேன்னு சொன்னார். அவர் சொன்னது போலவே அந்த கேரக்டரைஸேஷன் நன்றாக இருந்தது. அவரை போல சொன்னதைச் செய்யும் மனம் கொண்டவர்கள் சினிமாவில் குறைவு. அல்லது நான் அதிகம் பார்க்கவில்லை. நன்றி நண்பா !!!

ஷூட்டிங் அம்பத்தூர் ஆவின் பேக்டரியில் நடந்தது. மிராக்கிள் மைக்கில் மாஸ்டர் சண்டை பயிற்சியில் 3 நாட்கள் திரு. வைபவும் நானும் மோதும் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. டேபிளை உடைத்துக் கொண்டு விழும் ஒரு காட்சியில், “டூப் வேண்டாம் நானே நடிக்கிறேன் ” என்று சொல்லி நடித்தேன். ஆம்… அத்தனை ஆசை & ஆர்வம் அதில். கணுக்காலில் லேசாக சவ்வு கிழிந்து விட்டது. இன்னமும் அந்த பிரச்சனை சரியாகவில்லை. பிறகு வெங்கட் பிரபு சாருடன் ஒரு ஸ்டண்ட் சீக்வென்ஸ் இருக்கிறது. அது பூந்தமல்லி ஹைவெஸில் படமாக்கப்பட்டது.

இந்தப் படத்தின் மூலம் எனது நீண்ட நாள் ஆசையான வெங்கட் பிரபு சாரின் அறிமுகம் கிடைத்தது. ஷூட்டிங் ஸ்பாட்டில் வெங்கட் பிரபு சார், நிதின் சார், வைபவ், திரு. அரவிந்த் ஆகாஷ் என எப்போதுமே யாராவது இருப்பார்கள். அவர்கள் நட்பு அவர்களது படங்களில் மட்டுமில்லை நிஜத்திலும் பார்க்க அத்தனை அழகாக இருந்தது. இந்த டீம் ரொம்ப ஜாலியான டீம் & பார்ட்டி டீம் என எல்லாருக்கும் தெரியும். ஆனால் எல்லாருமே அவ்ளோ பாஸிட்டிவான டவுன் டூ எர்த் டீம் என்பது பழகிய பின்தான் தெரிந்தது.

தயாரிப்பாளர் திரு. நிதின் சத்யா அவர்கள். அவரது மனைவியும் டாக்டர். அவர் நுங்கம்பாக்கம் க்ளோவ் மருத்துவமனையிலும், என் மனைவி தீபிகா வளசரவாக்கம் க்ளோவ் மருத்துவமனையிலும் க்ளினிக்கல் ஹெட் ஆக பணிபுரிந்தார்கள். அவரை படத்தில் பார்த்திருக்கிறேன். ஆனால் நேரில் அறிமுகம் இந்தப் படம் மூலம்தான். படத்தில் எனக்கு சம்பள விஷயத்தில் ஒரு சிறிய மனஸ்தாபம் ஏற்பட்டபோது தயாரிப்பாளர் நிதின் சத்யா அவர்களே எனக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பினார். இந்த விஷயம் என் கவனத்துக்கு வரல.

முன்னாடியே தெரிஞ்சிருந்தா உடனே க்ளியர் பண்ண சொல்லிருப்பேன். என்ட்ட சொல்லாம அவங்களே சால்வ் பண்ண நெனச்சு லேட் பண்ணிட்டாங்க. மனசுல வச்சுக்காதீங்க ப்ரதர். No hard feelings என்று சொன்னதோடு அடுத்த அரை மணி நேரத்தில் மீதமிருந்த சம்பளத்தை அவரே அக்கவுண்டில் கிரெடிட் செய்தார். எனக்குத் தெரிந்து வேறு எந்த தயாரிப்பாளரும் இத்தனை டவுன் டூ எர்த்தாக இருப்பார்களா என்று தெரியாது. போன பத்து வருடத்தில் இந்த கம்பெனி, சன் பிக்சர்ஸ், ஆக்ஸெஸ் பிலிம் பேக்டரி தவிர்த்து வேறு எந்த கம்பெனியும் எனக்கு பேசிய சம்பளத்தை அப்படியே கொடுத்தது கிடையாது.

இந்த டீம் மொத்தமுமே நல்ல மனிதர்கள். கடுமையான உழைப்பாளிகள். அவர்கள் அனைவரது நல்ல மனதிற்காகவே இந்த படம் பெரிய வெற்றி பெற வேண்டும். நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதில் எனக்கும் வாய்ப்பளித்த இயக்குனருக்கு நன்றி.” என்று உணர்ச்சி பொங்க கூறினார்.

Facebook Comments

Related Articles

Back to top button