Spotlightசினிமா

விஷ்ணு விஷாலோடு ஜோடி போடும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

னு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தில் நாயகனாக நடித்துத் தயாரித்துள்ளார் விஷ்ணு விஷால். இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

‘எஃப்.ஐ.ஆர்’ படத்தைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார் விஷ்ணு விஷால். இதையும் தனது விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மூலமாக தயாரிக்கவுள்ளார்.

‘மோகன்தாஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் அறிமுக டீஸர் கொரோனா ஊரடங்கு சமயத்திலேயே வெளியிடப்பட்டது.

‘மோகன்தாஸ்’ படத்தை ‘களவு’ படத்தின் மூலம் ஆச்சரியப்படுத்திய முரளி கார்த்திக் இயக்கவுள்ளார். இந்தப் படம் ஒரு எமோஷனல் த்ரில்லர் பாணியிலான கதையாக உருவாகவுள்ளதாம்.

.

இதில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கவுள்ளார். அவருக்கு நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார்.

இந்திரஜித் சுகுமாரன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர்களுடன்பூர்ணிமா பாக்யராஜ், கருணாகரன்,அக்‌ஷய் ராதாகிருஷ்ணன்,ஷாரிக், லாலு, பிரகாஷ் ராகவன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.

இந்தப் படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடைபெற்றது. ‘களவு’ படத்தில் தன்னுடைய பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்களுடனே இந்தப் படத்திலும் பணிபுரியவுள்ளார் முரளி கார்த்திக்.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close