Spotlightசினிமா

ரூ.300 கோடியை தொட முடியாத ‘டாக்ஸிக்’… 5 நாட்களில் யஷ் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

‘கேஜிஎஃப்’ படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ (Toxic: A Fairy Tale for Grown-Ups). கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இப்படம் ஆகஸ்ட் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

முதல் நாளில் மிகப்பெரிய ஓப்பனிங்கை பதிவு செய்த ‘டாக்ஸிக்’, அடுத்தடுத்த நாட்களில் வசூலில் சரிவை சந்தித்துள்ளது. தற்போதைய பாக்ஸ் ஆபிஸ் தகவல்களின்படி, படம் வெளியான 5 நாட்களில் உலகளவில் ரூ.285.20 கோடி கிராஸ் வசூல் செய்துள்ளது.

இந்தியாவில் மட்டும் ‘டாக்ஸிக்’ திரைப்படம் ரூ.214.10 கோடி நெட் வசூலையும், ரூ.255.95 கோடி கிராஸ் வசூலையும் பதிவு செய்துள்ளது. வெளிநாடுகளில் இதுவரை சுமார் ரூ.29.25 கோடி வசூல் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக முதல் நாளில் ரூ.101.10 கோடி இந்திய நெட் வசூலுடன் அதிரடியாக தொடங்கிய படம், 2-வது நாளில் ரூ.37.65 கோடி, 3-வது நாளில் ரூ.27.20 கோடி, 4-வது நாளில் ரூ.25.15 கோடி என படிப்படியாக சரிவை சந்தித்தது. 5-வது நாளான ஞாயிற்றுக்கிழமை ரூ.23 கோடி நெட் வசூல் செய்துள்ளது.

இதன் மூலம் உலகளவில் ரூ.300 கோடி வசூல் என்ற மைல்கல்லை நெருங்கியுள்ள ‘டாக்ஸிக்’, 5 நாட்கள் முடிவில் ரூ.285.20 கோடியுடன் தனது திரையரங்க பயணத்தைத் தொடர்ந்து வருகிறது.

யஷுடன் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வரும் நாட்களில் படத்தின் வசூல் எப்படி இருக்கும், ரூ.300 கோடி மைல்கல்லை எப்போது கடக்கும் என்பதே தற்போது ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button