
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான கயாடு லோஹர் குறித்து சமூக வலைதளங்களில் தற்போது புதிய விவாதம் எழுந்துள்ளது. அவர் நடித்துள்ள ‘இம்மார்டல்’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்காதது குறித்து விமர்சனம் எழுந்துள்ளது.
கயாடு லோஹர் தமிழில் முதன்முதலில் ஒப்பந்தமான திரைப்படம் ‘இம்மார்டல்’ . ‘டிராகன்’ படத்திற்கு முன்பே இந்தப் படத்தில் அவர் ஒப்பந்தமாகியிருக்கிறார். அப்போது தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் அறிமுகம் இல்லாத கயாடு லோஹர், தற்போது கவனம் பெற்ற நடிகையாக மாறியிருக்கிறார்.
இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற ‘இம்மார்டல்’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் கயாடு லோஹர் கலந்துகொள்ளவில்லை என் குற்றச்சாட்டு அவர் மீது எழுந்துள்ளது.
மேலும், அந்த நேரத்தில் அவர் சென்னையிலேயே இருந்ததாகவும், ‘ImGame’ தொடர்பான மற்றொரு புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ‘இம்மார்டல்’ நிகழ்ச்சியில் பங்கேற்காமல் மற்றொரு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தன்னை தமிழ் சினிமாவில் ஆரம்பகட்டத்தில் அறிமுகப்படுத்திய படத்திற்கு அவர் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும் என்றும் அவர் மீது விமர்சனம் எழுந்துள்ளது
‘இம்மார்டல்’ ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாததற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
எனவே, சமூக வலைதளத்தில் முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனத்தை மட்டும் வைத்து கயாடு லோஹர் வேண்டுமென்றே நிகழ்ச்சியை புறக்கணித்ததாக உறுதியாக கூற முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக நடிகை கயாடு லோஹர் அல்லது ‘இம்மார்டல்’ படக்குழு தரப்பில் விளக்கம் வெளியாகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இதற்கிடையே, கயாடு லோஹர் தொடர்பான இந்த பதிவு ரசிகர்கள் மத்தியிலும் சினிமா வட்டாரத்திலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.





