
போபாலில் கடந்த ஞாயிற்றுக் கிழமை தேர்தல் நடைபெற்றது. லோக்சபா தேர்தலின் 6ம் கட்ட வாக்குப்பதிவுடன் சேர்த்து இந்த தேர்தலும் நடைபெற்றது.
போபாலில் கோவிந்தபுராவில் உள்ள ஐஐடியில் உள்ள வாக்குச்சாவடியில் பெண் அதிகாரி பணியாற்றி வந்தார். இவர் பெயர் யோகேஷ்வரி கோகித். கனரா வங்கியில் பணியாற்றும் இவர் அங்கு தேர்தல் பணியாளராக நியமிக்கப்பட்டு இருந்தார்.
இவர் மின்னனு வாக்குப்பதிவு எந்திரத்துடன் நடந்து வந்த புகைப்படம்தான் வைரலாகி இருக்கிறது. இந்த பெண் அணிந்து இருக்கும் வெண் நீல நிற உடை இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. இதையடுத்து பலரும் யார் இந்த பெண், யார் இந்த பெண் என்று தேடி கடைசியில் அவரின் பேஸ்புக் பக்கத்தையே கண்டுபிடித்திவிட்டனர்.
தேர்தலின் போது வாக்களிக்க வந்த சிலர் கூட இவருடன் செல்பி எடுக்க துடித்து இருக்கிறார்கள்.
இவரை பார்க்க அந்த வாக்குச்சாவடி வெளியே பலர் காத்து இருந்த நிகழ்வும் தேர்தல் அன்று நடந்துள்ளது.