Spotlightசினிமா

பற்றி எறியும் “தீக்கொழுத்தி” … இணையத்தில் வைரலாகும் பைசன் பட பாடல்!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் பைசன். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

படத்தினை வரும் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி திரைக்குக் கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், படத்திலிருந்து தீக்கொழுத்தி எனத் தொடங்கும் பாடல் ஒன்றை நேற்று படக்குழு வெளியிட்டது.

பாடல் வெளியானது முதல் இணையத்தில் தொடர்ந்து அனைவராலும் பாராட்டப்பட்டும் பகிரப்பட்டும் வருகிறது. இப்பாடலை இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா பாடியுள்ளார்.

பாடலின் வரியை மாரி செல்வராஜ் எழுதியிருக்கிறார். இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் நிவாஸ் கே பிரசன்னா.

வெளியான 12 மணி நேரத்தில் யூ டியூப் தளத்தில் மட்டும் சுமார் 9 லட்சம் பார்வைகளை கடந்திருக்கிறது. இயக்குனர் மாரி செல்வராஜ் இப்படத்தில் பெரிதாக சம்பவம் செய்திருப்பார் என்றும் இணையவாசிகள் கூறி வருகின்றனர்.

Facebook Comments

Related Articles

Back to top button