
நடிகர் கமல்ஹாசன் மற்றும் ஸ்டண்ட் இயக்குநர்கள் அன்பறிவு இணையும் புதிய படம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் சார்ந்ததாக இருக்கும் என கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் கமல்ஹாசன் கதைக்கு வலுவான உணர்ச்சி பின்னணி சேர்க்க வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் மட்டுமின்றி, உணர்ச்சி ரீதியாகவும் இணைக்கும் வகையில் கதை அமைய வேண்டும் என்பது அவரது கருத்தாக கூறப்படுகிறது.
மேலும், குடும்ப அம்சங்களும் இந்த படத்தின் மையக் கதையில் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படம் தேர்தல் முடிந்தவுடன் உடனடியாக தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த கூட்டணிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.





