
எஸ் எஸ் ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன், ராணா டகுபதி நடிப்பில் வெளிவந்து மிகப்பெரும் வெற்றி பெற்ற படம் தான் பாகுபலி. இதன் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தையும் எஸ் எஸ் ராஜமெளலி இயக்கியிருந்தார்.
இப்படம் வெளியாகி இன்றோடு மூன்று ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அனைத்து ரசிகர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்திருக்கிறார் நடிகர் பிரபாஸ்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ளதாவது, ‘ ‘பாகுபலி 2’ நம் இந்திய தேசமே விரும்பிய படம் மட்டுமல்ல, என் வாழ்க்கையின் மிகப்பெரிய படமும் கூட. மேலும், பாகுபலி 2 மூன்று ஆண்டுகளை நிறைவு செய்யும் இத்தருணத்தில், இதை மறக்க முடியாத திரைப்படங்களில் ஒன்றாக மாற்றிய எனது ரசிகர்கள், படக்குழுவினர் மற்றும் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி ஆகியோருக்கு நான் நன்றி செலுத்த கடமை பட்டிருக்கிறேன்.
மேலும் என் மீது அளப்பரிய அன்பு கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும், எனக்கு வாய்ப்பளித்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து மகிழ்கிறேன்.’ என்று கூறியுள்ளார்.





