
இயக்குனர் டெனிஸ் மஞ்சுநாத் அவர்களின் இயக்கத்தில் விஜயா சதீஷ் அவர்களின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் இந்த “மனிதன் தெய்வமாகலாம்”.
இப்படத்தில், செல்வராகவன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தில் மேலும், குஷி ரவி, கெளசல்யா, ஒய் ஜி மகேந்திரன், மைம் கோபி, உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.
படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன் வெளியான நிலையில், மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்திருந்தது.
படத்தினைப் பற்றி பேசிய இயக்குனர் டெனிஸ் மஞ்சுநாத், “ படத்தினை வெறும் 40 நாட்களின் எடுத்து முடித்தோம். சேலம் அருகே ஒரு குக்கிராமத்தில் இந்த படத்தினை எடுத்தோம்.
படத்திற்கு செல்வராகவன் சார் கொடுத்த ஒத்துழைப்பு என்பது வார்த்தைகளால் சொல்லி விட முடியாது. இந்தியாவில் தொடர்ச்சியாக நடந்து வரும் ஒரு உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி தான் இந்த படத்தினை எடுத்திருக்கிறோம்.

குடும்பமாய் சென்று பார்க்கும் படியாகத் தான் மனிதன் தெய்வமாகலாம் உருவாகியிருக்கிறது. சித்து குமாரின் உதவியாளரான ஏகே பிரியன் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மொத்தமாக படத்தில் நான்கு பாடல்கள் உள்ளன. நான்கு பாடல்களுமே மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது.
எந்த வம்பிற்கும் செல்லாத ஒரு மனிதன், தனது குடும்பத்தில் நடந்த ஒரு சம்பவத்திற்காக எடுத்து வைக்கும் ஒரு அடி தான் இந்த மனிதன் தெய்வமாகலாம் திரைப்படம்.
படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டது. ஏப்ரல் மாதத்தில் படத்தினை திரைக்குக் கொண்டு வர அனைத்து வேலைகளையும் செய்து வருகிறோம்.” என்று கூறினார்.





