
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு 50சதவீதம் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அடுத்து கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வருகிறது. மூத்த தயாரிப்பாளர் சங்கிலி முருகன் ரஜினியிடம் கால்ஷீட் கேட்டபோது ரஜினியே இந்த தகவலை அவரிடம் கூறியதாக செய்தி வருகிறது.
ரஜினியும் கே.எஸ். ரவிக்குமாரும் முத்து, படையப்பா, லிங்கா ஆகிய படங்களில் இணைந்து இருந்தார்கள். ரஜினிக்கு ஏற்ற கதையை இயக்க கே.எஸ்.ரவிக்குமாரே பொருத்தமானவர் என்று இப்போதே ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துவருகிறார்கள்.
Facebook Comments