ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறது ‘2.0’.
’ஐபிஎல் 2018’ தொடரின் இறுதிப்போட்டி வரும் மே.17ம் தேதி நடைபெறவுள்ளது. இவ்விழாவின் இறுதியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ‘2.0’ டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
இப்படத்தின் மூலம் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கோலிவுட்டில் அறிமுகமாகிறார். இப்படத்தில் எமி ஜாக்சன் கதாநாயகியாக நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிப்பில் சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள், உலகம் முழுவதிலும் உள்ள 250க்கும் மேற்பட்ட ஸ்டூடியோக்களில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
Facebook Comments