Spotlightவிளையாட்டு

ருத்ர தாண்டவம் ஆடிய வாட்சன்.. ஐதராபாத் அணியை வீழ்த்திய சென்னை!

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை எடுத்துள்ளது. மணீஷ் பாண்டே இறுதிவரை ஆட்டமிழக்காமல் 83 ரன்களை எடுத்தார். இதையடுத்து, சென்னை அணிக்கு 176 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. டு பிளிசிஸ் 1 ரன்னில் ரன் அவுட் ஆனார். வாட்சனுடன் ரெய்னா ஜோடி சேர்ந்து அதிரடியை வெளிப்படுத்தினர். ரெய்னா 24 பந்துகளில் 38 ரன்கள் எடுத்த போது ரஷித் கான் பந்து வீச்சில் ஸ்டெபிங் என்ற முறையில் வெளியேறினார்.

அடுத்து வந்த ராயுடு நிதானமாக விளையாடினார். மற்றொரு திசையில் இருந்த வாட்சன் ருத்ர தாண்டவம் ஆடினார். அவர் 52 பந்துகளில் 96 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஸ்வர் குமார் பந்து வீச்சில் வெளியேறினார்.

இதில் 6 சிக்சர்களும் 9 பவுண்டரிகளும் அடங்கும். இதனையடுத்து 6 பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் ராயுடு 1 ரன்னும் 2 பந்தில் கேதர் ஜாதவ் சிக்சும் அடித்தார். ராயுடு 21 ரன்னில் வெளியேறினார்.

இந்நிலையில் 1 பந்து மீதம் உள்ள போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது.

இதையடுத்து புள்ளிப் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button