
அறிமுக இயக்குனர் ஜெகதீசன் இயக்கத்தில் விஜு மற்றும் பல்லவி டோரா நடிப்பில் உருவாகியுள்ளது ‘மோசடி’.
நாயகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து தொடர்ந்து பல பேரை ‘மோசடி’ செய்து பணத்தை அபகரித்துக் கொண்டிருக்கிறார். லட்சங்கள், கோடிகள் என தொடர்ந்து மோசடி செய்து அப்பாவி மக்களிடம் இருந்து பணத்தை அபகரிக்கிறார். உதாரணமாக கூற வேண்டும் என்றால் சதுரங்க வேட்டை படத்தில் நடக்கும் அதே நூதன முறை மோசடி தான்.
இந்த மோசடி கும்பலை போலீஸார் கைது செய்து விடுகின்றனர். எதற்காக இந்த மோசடியில் ஈடுபட்டார் என்பதை நாயகன் விளக்குகிறார். கதை ப்ளாஷ் பேக் செல்கிறது.
தமிழக அமைச்சர் ஒருவரின் உதவியாளராக இருக்கும் நாயகன் விஜு, அவரின் அனைத்து பண பரிவர்த்தனைகளும் விஜுவே பார்த்து வருகிறார். இந்நிலையில், விபத்தாக வந்த பல்லவி டோராவின் காதலை ஏற்றுக் கொள்கிறார். இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார் அமைச்சர்.
திடீரென ஒருநாள், மோடியின் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வருகிறது. அமைச்சரின் பல கோடி பழைய நோட்டுகளை புது நோட்டுகளாக மாற்றிக் கொடுக்கிறார் விஜு.
புது ரூபாய் நோட்டுகள் அனைத்தும் விஜுவிடம் இருக்க, அது கொள்ளையடிக்கபடுகிறது. அதன் பிறகு நடக்கப்போவதே இந்த ‘மோசடி’ படத்தின் மீதிக் கதை.
நாயகன் விஜு, தமிழ் சினிமாவிற்கு ஒரு வரவுதான் என்றாலும், இன்னும் கொஞ்சம் பயிற்சி பெற வேண்டும் என்று தோன்றுகிறது. நாயகி பல்லவி டோரா அழகாக வந்து செல்கிறார்.
கதையின், ஒன் லைன் நன்றாக இருந்தாலும், அதைக் கொண்டு சென்ற விதம் எரிச்சலடைய வைத்திருக்கிறது.
நாடகத்தன்மையான நடிப்பை ஆங்காங்கே பலர் வெளிப்படுத்தியிருப்பது எரிச்சலடைய வைத்திருக்கிறது.
தன் காதலியை மீட்க, அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் அபகரீக்க வேண்டுமா இயக்குனரே.. லாஜிக் வேண்டாமா..??
மோசடி – மோசடி தான் 2.25/5





