Spotlightசினிமா

ஆளுங்கட்சியை வைத்து உன்னை ஜெயிலில் தள்ளுவேன்..மிரட்டப்பட்ட விஷால்!

டிகர் சங்க தேர்தல் இம்மாதம் 23 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்காக நடிகர், நடிகைகளிடம் வாக்கு சேகரிக்கும் பணியில் இறங்கி விட்டனர் இருஅணியினரும்.

விஷால் தலைமையில் ஒரு அணியும் ஐசரி கணேசன் தலைமையில் மற்றொரு அணியும் தேர்தலில் போட்டியிடுகின்றன. விஷால் தலைமையிலான அணியில் சென்ற வருடம் வென்ற நாசர் அவர்களே இம்முறையும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

ஐசரி கணேசன் தலைமையில் இயக்குனர் பாக்யராஜ் அவர்கள் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம், விஷால் மற்றும் கார்த்திக்கு ஆகிய இருவருக்கும் ஐசரி கணேஷ் அழைப்பு விடுத்துள்ளார். ஐசரி கணேஷின் அழைப்பை ஏற்று, நேற்றைய முன்தினம் இரவு விஷால் மற்றும் கார்த்தி ஐசரி கணேஷை சென்னை நந்தனத்தில் உள்ள ஐசரி கணேஷ் அலுவலகத்தில் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றுள்ளது.

அப்போது ஐசரி கணேஷ், விஷாலிடம் முதலில் கேட்ட கேள்வி, “எதற்க்காக நீங்கள் மு.க.ஸ்டாலினை சந்தித்தீர்கள்? உங்களுடைய இந்த செயல், தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக’விற்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.” என்று சொல்லியுள்ளார்.

அதற்க்கு விஷால், “எங்கள் குடும்பமும் அவர்கள் குடும்பமும் நண்பர்கள். நான் சிறு வயதிலிருந்து அவர்களுடைய கோபாலபுரம் வீட்டிற்கு சென்று வருவது வழக்கம், உதயநிதி என்னுடைய வகுப்பு தோழன். இதில் என்ன தவறு இருக்கிறது?” என்று பதிலளித்துள்ளார். மீண்டும் பேசிய ஐசரி கணேஷ், ஆளும் அதிமுக கட்சி உங்கள் மீது கடும் கோபத்தில் உள்ளது.

எனவே நீங்கள் சற்று மதித்து நடக்க வேண்டும். உங்கள் மீது தமிழக அரசு வழக்கு ஏதாவது போட்டு உங்களை கைது கூட செய்ய கூடும். எனவே உஷாராக இருங்கள்.” என்று மறைமுக மிரட்டலாக ஐசரி கணேஷ் எச்சரித்துள்ளதாக தகவல்கள் சொல்கின்றன. “இந்த தேர்தலில் காவல் துறை அதிக அளவில் பந்தோபஸ்தில் இருக்குமென்றும், அங்கு ஏதாவது காரணம் காட்டி உன்னை காவல்துறை கைது செய்ய வாய்ப்புகள் உள்ளது. எனவே நீ இந்த முறை நடக்கும் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட கூடாது.” என ஐசரி கணேஷ் கட்டளையிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த வார்த்தையை கேட்ட விஷாலும் கார்த்தியும் கடுப்பாகியுள்ளனர். கடுப்பான விஷால், “நான் ஏன் போட்டியிட கூடாது? நீங்கள் பொது செயலாளர் பதவிக்கு போட்டியிட போகிறீர்களா?” என ஐசரி கணேஷிடம் விஷால் கேட்டுள்ளார். அதற்க்கு ஆமாம் போட்டியிட போறேன் என்று ஐசரி கணேஷ் பதிலளித்துள்ளார். “ஆளும் அதிமுக அரசு சார்பாக தான் என்னுடைய தலைமையில் இந்த நடிகர் சங்கம் தேர்தலில் போட்டியிடுகிறோம்.

காவல்துறை மற்றும் ஆளும் அதிமுக அரசு எங்கள் அணிக்கு சப்போர்ட்டாக இருக்கிறது. பணம் கொடுத்தால் நாடக நடிகர்கள் எங்கள் பக்கம் வருவார்கள். உங்கள் அணி போட்டியிட்டால், உங்களுக்கு தோல்வி நிச்சயம். என்னுடைய 26 கல்வி நிறுவனங்களை நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்றால், நான் ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்க வேண்டும்.” என்று ஐசரி கணேஷ் சொல்ல, “நீங்கள் உங்கள் சொத்தை காப்பாற்றி கொள்ளுங்கள், நான் என்னுடைய மனசாட்சிப்படி, இந்த நடிகர் சங்கம் சொத்தை காப்பாற்ற

விரும்புகிறேன்.” என ஐசரி கணேஷிடம் விஷால் சொல்ல, “கிளம்பு மச்சான்.” என்று கார்த்தி சொல்ல, இருவரும் அந்த இடத்திலிருந்து கிளம்பினார்கள் என்று ஒரு செய்தி வலம் வந்து கொண்டு இருக்கிறது.

ஆளும் கட்சியின் துணையோடு மிரட்டல் தோனியில் ஈடுபட்டு வரும் ஐசரி கணேசன் மீது பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இது வரும் தேர்தலில் எதிரொலியாக நிச்சயம் வெளிப்படும் எனவும் தெரிகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button