Spotlightசினிமா

‘இந்தியன் 2’ படத்தில் இருந்து வெளியேறிய பிரபலம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

 

லைகா நிறுவனம் தயாரிக்க பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்க உருவாகி வருகிறது ‘இந்தியன் 2’.

இப்படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். பல காரணங்களால் தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு பல இடையூறுகளை சந்தித்து வருகிறது.

தற்போது, அனைத்து தரப்பினரிடையேயும் சுமூகமாக பேசப்பட்டு மீண்டும் படப்பிடிப்பினை நடத்த படக்குழு திட்டமிட்டிருந்தது.

இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த ரவி வர்மன், ’இந்தியன் 2’ வில் இருந்து தான் விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

இதனால் படக்குழு மட்டுமல்லாது, ரசிகர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதன் காரணமாக ரவி வர்மனுக்கு பதிலாக, ரத்னவேல் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக இணைந்துள்ளார்.

ரத்னவேல், ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் உருவான எந்திரன் படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button