Spotlightசினிமா

‘ஆம்.. திருமணமானவருடன் உடல் ரீதியாக உறவு வைத்திருந்தேன் – கலங்கிய ஆண்ட்ரியா!

பாடகராக அறிமுகமாகி பின் பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், மங்காத்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஆண்ட்ரியா.

கடைசியாக விஸ்வரூபம் 2, வட சென்னை ஆகிய படன்களில் நடித்தார். கடந்த சில மாதங்களாக ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்ததால் நடிப்பில் இருந்து விலகி இருந்தார். ஆனால் மாதக்கணக்காய் ஆயுர்வேத சிகிச்சை எடுக்கும் அளவுக்கு அவரை தாக்கிய சோகம் எது என்பது பற்றி தெரியாமல் அவருடைய ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர்.

இந்நிலையில் பெங்களூரில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் கலந்து கொண்டார் ஆண்ட்ரியா. சோகத்தை வெளிப்படுத்தும் விதமாக கவிதை ஒன்றை அவர் எழுதியிருந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது ரசிகர்கள் அதற்கான காரணத்தை கேட்டுள்ளனர். இதைதொடர்ந்து பேசிய ஆண்ட்ரியா, ” நான் திருமணம் ஆன ஒருவரோடு உடல் ரீதியாக தொடர்பில் இருந்தேன். ஆனால் அவர் என்னை மனதளவில் காயப்படுத்தினார். அதில் இருந்து மீள முடியாமல் இருந்த போதுதான் இந்த கவிதையை எழுதினேன்” என்றார். ஆயுர்வேத சிகிச்சைக்கான காரணமும் இதுதான் என்றும் அவர் தெரிவித்தார்.

Facebook Comments

Related Articles

Back to top button