Spotlightசினிமா

நாகேந்திரனின் ஹனிமூன்ஸ் வெப்சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் நான்காவது மலையாள வெப்சீரிஸ், நாகேந்திரனின் ஹனிமூன்ஸ் சீரிஸை, விரைவில் ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது. வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் வகையில் அதிரடி திருப்பங்களுடன் உருவாகியுள்ள ஹனிமூன்ஸ் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் உருவாகியுள்ள இந்த சீரிஸில், சுராஜ் வெஞ்சரமுடு முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், கிரேஸ் ஆண்டனி, ஷேவ்தா மேனன், கனி குஸ்ருதி, ஆல்பி பஞ்சிகரன், நிரஞ்சனா அனூப், பிரசாந்த் அலெக்சாண்டர், அம்மு அபிராமி, ஜனார்த்தனன், கலாபவன் ஷாஜோன் & ரமேஷ் பிஷாரடி ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.

MGC(P) Ltd உடன் இணைந்து நிதின் ரஞ்சி பணிக்கர் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நிரஞ்சன் ரஞ்சி பணிக்கர் இந்த சீரிஸை எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். நிகில் S பிரவீனின் அசத்தலான காட்சியமைப்புகள் மற்றும் ரஞ்சின் ராஜின் வசீகரிக்கும் இசையில், இந்த சீரிஸ் நகைச்சுவை, கலந்த அசத்தலான அனுபவத்தைத் தரும் சீரிஸாக உருவாகியுள்ளது, இந்த பரபரப்பான சீரிஸை விரைவில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் கண்டுகளியுங்கள்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி:

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முன்னதாக ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கைப் பார்க்கும் முறையை மாற்றி அமைத்துள்ளது. ரசிகர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்வுகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது, மற்றும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button