
உலகம் முழுவதும் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதுவரை சுமார் 75,000 பேர் இந்த கொடூர வைரஸால் இறந்துள்ளனர்.
இந்த கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாட்டு ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஃபிலடெல்பியா மாகாணத்தில் பிரபல பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் INO – 4800 என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர்.
இந்த தடுப்பூசியை இன்று பரிசோதனை செய்ய உள்ளனர். இதற்காக 40 பேரை அவர்கள் தேர்வு செய்துள்ளனர். சோதனைக்கு முன்வந்தவர்களுக்கு 4 வார இடைவெளியில் தடுப்பூசி போடப்படும்.
அதன் முடிவுகள் எப்போது என்பது குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
Facebook Comments





