
இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘தாதா 87. இப்படத்தில் சாருஹாசன், ஆனந்த், பல்லவி ஆகியோர் நடித்திருந்தனர்.
சாருஹாசன் இப்படத்தில் தாதா -வாக நடித்திருந்தார். இப்படத்தில் திருநங்கையின் காதலை, வலியை மிகவும் உணர்வுபூர்வமாக இயக்கியிருந்தார் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி.
தனித்துவமான கதையம்சத்தோடு வெளிவந்த இப்படம் பெரும்பான்மயான ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில், இப்படத்தினை தெலுங்கிலும் தான் இயக்கப் போவதாக இயக்குனர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
’தாதா 87’ கதையை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டது போல தெலுங்கு ரசிகர்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இதோ அவர் ட்விட்டர் பதிவு,
விரைவில் #தாதா87 படத்தை தெலுங்கில் இயக்குகிறேன் திருநங்கை என்று தெரியாமல் காதலித்த நாயகனை ஏற்றுக் கொண்டாளா என்பதை தமிழில் ஆதரித்தது போல் தெலுங்கிலும் ரசிகர்கள் ஆதரவு தருவார்கள் என நம்பிக்கையுடன்…
விரைவில் திரையில்….





