Spotlightசினிமா

அதீத எதிர்பார்ப்புடன் “லாபம்” படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள் !!

 

விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் “லாபம்”

கொரோனா 2வது அலைக்குப் பிறகு தமிழகத்தில் திரையரங்குகள் கட்டுப்பாடுகளுடன் திறக்க தமிழக அரசு அனுமதித்துள்ளது.

இந்நிலையில், திரையரங்கில் முதல் படமாக வரும் 10 ஆம் தேதி “லாபம்” திரைப்படம் வெளிவரவிருக்கிறது.

இதோடு, தலைவி படமும் வெளியாகவுள்ளது..

எஸ் பி ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் ரிலீஸ் தினத்தில் அவர் மண்ணில் இல்லாதது படக்குழுவினரை மட்டுமல்லாது ஒட்டு மொத்த தமிழ்சினிமாவையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

மனதில் மட்டுமல்லாது திரையிலும் கொள்கையையும் நேர்மையையும் கையாளும் இயகுனர் எஸ் பி ஜனநாதனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் லாபம் படத்தினை காண ரசிகர்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாது, மக்கள் செல்வனாக தமிழ் சினிமாவின் யதார்த்த நாயகன் விஜய் சேதுபதி இப்படத்தில் ஹீரோவாக நடித்திருப்பது ரசிகர்களுக்கு மேலும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது..

தமிழ்நாடு முழுவதும் அநேக திரையரங்கில் இப்படம் வரும் 10ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

Facebook Comments

Related Articles

Back to top button