Spotlightசினிமா

டேட்டாவை திருடுகிறதா “Hoote” App !? ரஜினி மகள் செளந்தர்யாவுக்கு நெருக்கடி!

நாளுக்கு நாள் சமூக வலைதளங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் வரிசையில் தற்போது ”HOOTE” என்ற சமூக வலைதளமும் இணைந்துள்ளது.

இந்த சமூக வலைதளத்தில் வாய்ஸ் மூலம் செய்தியை பகிரக்கூடிய முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வலைதளத்தை ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா மற்றும் போக்கலா என்பவருடன் இணைந்து இதை தொடங்கியுள்ளார் தொடங்கியுள்ளார்.

சில தினங்களுக்கு முன் சிவகார்த்திகேயன், இயக்குனர் பா ரஞ்சித், சீமான் என சிலர் தங்களை இந்த “ஹூட்” சமூக வலைதளத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்நிலையில், நேற்று டாக்டர் ஷர்மிளா, ஹூட் தளம் எப்படி இருக்கிறது என்று தனது ட்விட்டர் தளத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பலரும் பதில் அளித்திருந்த நிலையில், சிலர் “ஹூட்” தளம் டேட்டாவை திருடுவதாகவும், அதில் “Bugs” இருப்பதாகவும், ரஜினியை வைத்து ப்ரொமோஷன் தான் அதிகம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறியிருந்தனர்.

ஆனால், ஒருவர் கூட “ஹூட்” பயனுள்ளதாக இருக்கிறது என்று கூறாதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பயனர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தையும் சந்தேகத்தையும் தீர்த்து வைப்பாரா செளந்தர்யா ரஜினிகாந்த்.?

Facebook Comments

Related Articles

Back to top button