Spotlightவிமர்சனங்கள்

99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு – விமர்சனம் 3/5

நடிகர்கள்: சபரி, ரோகிந்த், ரக்ஷிதா மகாலட்சுமி, ஸ்வேதா, பவன் கிருஷ்ணா, கே ஆர் விஜயா, கே எஸ் வெங்கடேஷ், எஸ். சினேகா, குமாரி கனிஷ்கா, பி எல் தேனப்பன், சிங்கம் புலி, புஜ்ஜிபாபு, சாம்ஸ்
அம்பானி சங்கர், முல்லை, கோதண்டம்,

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, தயாரிப்பு என அனைத்தையும் செய்து இப்படத்தை இயக்கவும் செய்திருக்கிறார் எம் எஸ் மூர்த்தி.

ஒளிப்பதிவு – சேவிலோ ராஜா

படத்தொகுப்பு – மீனாட்சி சுந்தரம்

கலை இயக்குனர் – ஜெயமுருகன் .

சபரி மற்றும் மகாலட்சுமி இருவரும் கணவன் மனைவியாக வாழ்கின்றனர். வீடு ஒன்றை வாங்குவதற்காக அப்பார்ட்மெண்ட் ஒன்றை பார்க்க செல்கின்றனர் இருவரும். 99 வீடுகள் கொண்ட அந்த அப்பார்ட்மெண்டில் 66 ஆவது வீட்டில் புதிதாக குடியேறுகின்றனர் சபரி மற்றும் ரக்ஷிதா.

ரக்‌ஷிதா பெயரில் இருக்கும் இரண்டு கோடி ரூபாய் டெபாசிட் தொகையை கைப்பற்றுவதற்காக ரக்‌ஷிதாவை கொலை செய்ய திட்டமிடுகிறார் அவரது கணவர் சபரி. இந்நிலையில் ரக்ஷிதாவின் தோழியாக அதே அப்பார்ட்மெண்டில் வசிக்கும் ஸ்வேதா அறிமுகமாகிறார். இருவரும் நல்லதொரு நட்பில் இருக்கின்றனர்.

ஒரு கட்டத்தில் அங்கு சில அமானுஷ்ய முறையில் சில நடப்பதை அறிகின்றனர் ரக்‌ஷிதாவும் அங்கு வசிக்கும் சில பெண்களும். அதன் பிறகு தான் தெரிகிறது ஸ்வேதா இறந்து விட்டார் என்றும் அவரது ஆன்மாவே தன்னிடம் இத்தனை நாட்களாக பேசிக் கொண்டிருப்பதையும் ரக்ஷிதா அறிந்து கொள்கிறார்.

இறுதியில் யார் இந்த ஸ்வேதா.? எதற்காக அவர் ரக்ஷிதாவிடம் தோழியாக பழகினார்.? ஸ்வேதாவின் இறப்பிற்கு யார் காரணம்.?? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இரண்டாம் பாதியில் விட வைத்து இருக்கிறார் இயக்குனர்.

அழகிலும் நடிப்பிலும் நன்றாகவே ஜொலித்திருக்கிறார் ரக்‌ஷிதா. நடித்திருக்கிறார் என்று கூறுவதை விட, அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அப்படியொரு நடிப்பை இப்படத்தில் கொடுத்திருக்கிறார்.

இவரது கணவராக நடித்த சபரி கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். மற்றொரு கதாநாயகியாக நடித்திருந்த ஸ்வேதா பார்ப்பதற்கு அழகாகவும் நடிப்பில் அளவாகவும் நடித்து அனைவரையும் வெகுவாக கவர்ந்திருக்கிறார். மேலும் படத்தில் நடித்த பவன் கிருஷ்ணா, கே ஆர் விஜயா கோதண்டம், முல்லை, சாம்ஸ், அம்பானி சங்கர் உள்ளிட்ட நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்டதை அளவாக செய்து முடித்திருக்கின்றனர்.

முதல் பாதியில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பிலேயே கதை நகர்த்திச் சென்றது இயக்குனரின் திறமை தான். எந்த ஒரு இடத்திலும் கதையை தொய்வடையாமல் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பிலேயே ஒவ்வொரு காட்சிகளையும் மிக அழகாக கடத்திச் சென்றிருக்கிறார்.

பின்னணி செய்யும் பாடல்களும் படத்திற்கு பெரிதாகவே கை கொடுத்திருக்கின்றன. படத்தின் மிகப்பெரிய பலமே ஒளிப்பதிவு தான். காட்சிகள் ஒவ்வொன்றிலும் தனது தனித்திறமையை நன்றாகவே வெளிப்படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

சின்ன பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படம் என்று இப்படத்தை ஒரு இடத்திலும் சொல்ல முடியாத வண்ணம் மிகப்பெரும் உழைப்பை இயக்குனர் கொடுத்திருக்கிறார். காட்சியமைப்பு வசனங்கள் என இயக்குனர் தனது திறமை முழுவதையும் கொடுத்திருக்கிறார்.

பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு ஒரு தீர்வாகவே இப்படம் அமைந்திருக்கிறது. அனைவரிடத்தில் வெறுப்பை காட்டாமல் அன்பை மட்டுமே போதிக்கும் புத்தரின் பொன்மொழிகளோடு பல காட்சிகளை நமக்குள் கடத்தியிருப்பது பலம்.

மொத்தத்தில்,

99/66 – அன்பை போதிக்கும்…

Facebook Comments

Related Articles

Back to top button