Spotlightசினிமா

“இந்த இயக்குனரிடம் இருந்து இப்படியொரு படமா? ‘கர’ பார்த்து மிரண்ட ரசிகர்கள்!” 🔥**

போர் தொழில் என்ற படத்தை எடுத்த இயக்குனரிடம் இருந்து இப்படியொரு படமா என்று தனுஷ் நடித்து வெளிவந்த “கர” திரைப்படத்தினைக் கண்டு ரசித்த மக்கள் ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளனர்.

சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன் வெளியாகி இந்திய சினிமாவிலேயே மிக முக்கியமான ஒரு திரைப்படமாக அமைந்த படம் தான் “போர் தொழில்”. சீரியல் கில்லர் மையப்படுத்து கதையை நகர்த்தியிருப்பார் இயக்குனர் விக்னேஷ் ராஜா.

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனுஷை வைத்து கர என்ற படத்தினை இயக்கியிருந்தார் விக்னேஷ் ராஜா. இந்த படம் நேற்றைய தினம் உலகம் முழுக்க வெளியானது. படம் முதல் நாளே மிகப்பெரும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

முழுக்க முழுக்க விவசாயிகளை மையப்படுத்தி இப்படத்தை இயக்கியிருக்கிறார் விக்னேஷ் ராஜா. போர் தொழில் மாதிரியான படத்தை எடுத்த இயக்குனரிடமிருந்து இப்படியொரு படத்தை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை என்று படம் பார்த்த அநேக ரசிகர்கள் கூறிய விமர்சனமாக இருந்தது.

நல்லதொரு விமர்சனத்தைத் தொடர்ந்து முதல்நாளைக் காட்டிலும் இரண்டாவது நாள் கர படத்திற்கு அநேக வரவேற்பு கிடைத்துள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

Facebook Comments

Related Articles

Back to top button