KRG கண்ணன் ரவியின் பிரமாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில் உருவாகி வரும் “பேங் பேங்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.
மலேசியாவில் 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. பிரமாண்ட காட்சிகள் படத்தின் முக்கிய ஹைலைட்டாக அமையும் என படக்குழு தெரிவித்துள்ளது.
இப்படத்தினை இயக்குநர் சாம் ரோட்ரிகஸ் (Sam Rodrigues) எழுதி இயக்குகிறார். ஹாரர் அட்வென்ச்சர் பாணியில் உருவாகும் இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். H.C. வேணு ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைக்கிறார். ஆண்டனி படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை இயக்கத்தை டான் பாலா செய்துள்ளார். ‘அனிமல்’ திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற Sync Cinema நிறுவனம் சவுண்ட் டிசைனை மேற்கொண்டுள்ளது. மேலும், தெலுங்கானா மாநில விருது பெற்ற அரவிந்த் மேனன் சவுண்ட் மிக்சிங் பணிகளை செய்துள்ளார்.
நடிகர் பப்லு பிரித்திவிராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம், KRG நிறுவனத்தின் நான்காவது பிரமாண்ட தயாரிப்பாக உருவாகி வருகிறது. இந்தோனேசியாவின் Mount Bromo எரிமலை பகுதியில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்த நிலையில், விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.





