
இந்திய சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவராக போற்றப்படும் “இயக்குநர் இமயம்” பாரதிராஜா மறைவு திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கிராமத்து மண்ணின் மணம், மனித உறவுகளின் அழகு, காதலின் தூய்மை மற்றும் சாதாரண மக்களின் உணர்வுகளை திரைமொழியாக மாற்றிய அவரது படைப்புகள், இந்திய சினிமாவின் வரலாற்றில் அழியாத இடத்தைப் பெற்றுள்ளன.
பாரதிராஜா குறித்து நடிகர் சிரஞ்சீவி வெளியிடப்பட்டுள்ள உருக்கமான இரங்கல் செய்தியில், “இந்திய சினிமா தனது மிகச் சிறந்த கதை சொல்லிகளில் ஒருவரை இழந்துவிட்டது. கிராமத்து வாழ்க்கையின் நறுமணம், மனித உறவுகளின் அழகு, காதலின் அப்பாவித்தனம் மற்றும் சாதாரண மக்களின் உணர்வுகளை அவர் காலத்தால் அழியாத சினிமா கவிதைகளாக மாற்றினார். அவரது திரைப்படங்கள் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களைத் தொட்டதோடு, பல தலைமுறை திரைப்படக் கலைஞர்களுக்கும் உத்வேகமாக அமைந்தன” எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
பத்மஸ்ரீ மற்றும் பல தேசிய விருதுகளை வென்ற பாரதிராஜாவின் இந்திய சினிமாவுக்கான பங்களிப்பு அளவிட முடியாதது என்றும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், “ஆராதனா” திரைப்படத்தில் ‘புலிராஜு’ கதாபாத்திரத்தில் அவரது இயக்கத்தில் பணியாற்றிய அனுபவம் எனக்கு கிடைத்தது. சினிமா மீதான அவரது பேரார்வம், எளிமை மற்றும் கலை மீதான அர்ப்பணிப்பு எனக்கு மறக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தியது” என்றும் நினைவுகூர்ந்திருக்கிறார் பாரதிராஜா.
பாரதிராஜா இன்று உடல்ரீதியாக நம்மிடையே இல்லாவிட்டாலும், அவரது படைப்புகள் மூலமாக அவர் என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
“இயக்குநர் இமயம்” பாரதிராஜா அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலி. ஓம் சாந்தி.





