Spotlightசினிமா

அஜித்துக்கு வில்லனாக களமிறங்கும் சிவராஜ்குமார்! ‘டேர் டெவில்’ படத்தில் மாஸ் கூட்டணி!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘டேர் டெவில்’ (Dare Devil). இப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் வில்லனாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் அஜித்துக்கு எதிராக மிகவும் வலிமையான வில்லன் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் கதாபாத்திரத்தில் சிவராஜ்குமார் நடிப்பதை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா உறுதிப்படுத்தியுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும், மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு முன்பே சிவராஜ்குமாரிடம் படத்தின் கதையை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் விவரித்ததாகவும், கதையைக் கேட்டதும் அவர் நடிக்கச் சம்மதித்ததாகவும் கூறப்படுகிறது.

சிவராஜ்குமார் நவம்பர் 17 அல்லது 18ஆம் தேதி படப்பிடிப்பில் இணையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் அஜித், பிரபு, பார்த்திபன், ஸ்ரீலீலா உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர். தற்போது அதிரடி சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் வரை நடைபெறவுள்ளது.

ஏற்கெனவே ‘ஜெயிலர்’, ‘கேப்டன் மில்லர்’ உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ள சிவராஜ்குமார், தற்போது அஜித்துக்கு வில்லனாக நடிக்கவிருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Facebook Comments

Related Articles

Back to top button