Spotlightவிமர்சனங்கள்

ஏ 1 ; விமர்சனம் 3.5/5

ஹீரோ சந்தானம் சென்னை லோக்கல் ஏரியாவைச் சேர்ந்த வாலிபன்…

நாயகி, தாரா அக்கிரஹாரத்து பெண்… இருவருக்கும் காதல் வளர, வழக்கம் போல், ஜாதி, சம்பிரதாயங்களை கூறி நாயகியின் தந்தை ஹீரோவை ரிஜெக்ட் செய்கிறார்.

இதனால், ஹீரோ ஹீரொயினிடம் அவரது தந்தையை பற்றி அவதூறாக பேச, கோபமடைந்த நாயகி, ‘ என் அப்பா மிகவும் நல்லவர்.அவர் மீது ஏதாவது ஒரு தப்பை நீ கண்டுபிடித்தால், உன்னை நான் திருமணம் செய்கிறேன்.’ என்று கூறிவிடுகிறார்.

அதன்பிறகு நடக்கும் சம்பவங்களே படத்தின் மீதிக் கதை….

படத்தின் நாயகனாக வரும் சந்தானம், கதைக்கு தேவையான நாயகனாகவே தெரிகிறார். அவரது டைமிங்க் காமெடி படத்திற்கு பலமாகவே அமைந்திருக்கிறது.

நாயகி தாரா, அழகாக இருக்கிறார் ஆங்காங்கே அவருக்கு ஸ்கோர் செய்யக்கூடிய இடமும் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

படத்தின் மிகப்பெரிய பலம் என்றால், அது துணை நடிகர்கள் தான். எம் எஸ் பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன், பழைய ஜோக் தங்கதுரை, மாறன், லொள்ளு சபா மனோகர், கிங்ஸ்லி என அனைவருமே படத்தை வேற லெவலுக்கு கொண்டு சென்றிருக்கின்றனர்.

இன்ஸ்பெக்டராக வரும் சாய்குமார், படத்திற்கு மேலும் ஒரு பலம்

அதிலும், எம் எஸ் பாஸ்கர் தனது அனுபவ நடிப்பை மிகக் கச்சிதமாக கொடுத்திருக்கிறார்.

நாயகியின் தந்தையாக வருபவர், க்ளைமாக்ஸில் வைத்த ட்விஸ்ட் காட்சிக்கு யாரும் சிரிக்காமல் இருக்க முடியாது.

சந்தோஷ் நாராயணனின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும் ரகம், மற்றும் பின்னனி இசையும் படத்தின் ஓட்டத்திற்கு உயிர் கொடுத்துள்ளது….

கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு காட்சிகள் அனைத்தையும் கலர்புல்லாக கொடுத்திருக்கிறார்.

படத்திற்கு தேவையான காட்சிகளை மட்டும் எடிட் செய்து ஷார்ப்பாக கொடுத்திருக்கிறார் எடிட்டர் லியோ ஜான் பால்…

தனது முதல் படம் என்றாலும், காமெடிக்கென்று இயக்குனர் ஜான்சன் எடுத்த மெனக்கெடல் சபாஷ்..

கதை என்ற ஒன்று இல்லை என்றாலும் இரண்டு மணி நேரம் நன்றாக சிரித்து மகிழ இந்த படத்திற்கு நிச்சயம் செல்லலாம்.

ஏ1 – லாஜிக் இல்லை மேஜிக் இருக்கு… வயிறு குலுங்க சிரிக்க ’ஏ1’ பாருங்க

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker