
தனிமனித சுதந்தரத்தில் தலையீடு என குற்றம் சாட்டப்பட்ட ஆதார் அட்டை தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.
அதன் படி, தனி மனிதர்களின் அடையாளத்துக்கு ஆதார் கட்டாயம் என்றும், அரசு சேவைகளை பெற ஆதார் எண் நிச்சயம் வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் அதிகம் விவாதிக்கப்பட்ட விஷயம் ஆதார் என்று வழக்கை விசாரித்த 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் பெரும்பான்மையாக தீர்பளித்துள்ளனர்
பள்ளி சேர்க்கைக்கும், நீட், சிபிஎஸ்இ போன்ற தேர்வுகளுக்கும் ஆதாரை கட்டாயமாக்க கூடாது என உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி அறிவித்தார். ஆதார் இல்லை எனக்கூறி குழந்தைகளுக்கான கல்வி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை மறுக்கக்கூடாது. ஆதாருக்காக பெறப்படும் தகவல் குறைவு; நன்மைகள் அதிகம் என தெரிவிக்கப்பட்டது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய பான் எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்றும், தனிநபர் காக்கப்பட ஆதார் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. வங்கி கணக்கு தொடங்க, செல்போன் இணைப்பு பெற ஆதாரை கட்டாயமாக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளது.





